×

பாலியல் மன்னன் ‘பெல்’லை இலை கட்சியில் இருந்து தூக்கணும்னு சின்ன மம்மி ஆட்கள் குரல் எழும்பி இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சின்ன மம்மிக்கு அல்வா கொடுத்த அல்வா மாவட்ட அரசியல்வாதி பற்றிச் சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியில் தன் ஆளுமையை கொண்டு வர நலம் விசாரிப்பு என்ற பெயரில் சின்ன மம்மி பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார். இவரை கண்டித்து இலை கட்சியினர் பல்வேறு மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த  சபரிமலை சாமி பெயரைக் கொண்ட குக்கர் கட்சி பிரமுகர் ஆளுங்கட்சிக்கு தாவினார்.. நம்ம கட்சியிலும் இல்லாமல், இலையிலும் இல்லாமல் தாவியதை சின்ன மம்மி தரப்பு எதிர்பார்க்கவே இல்லையாம். இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்  குக்கர்காரர். இவரது தாவல் சின்ன மம்மியின் ஆசையை அசைத்துப்  பார்த்துள்ளதாம். குக்கர் கட்சி வேட்பாளரை கூட கட்சியில் வைக்க முடியாதவர் இலையை எங்கே காப்பாற்றப் போகிறார் என சின்ன மம்மியை பதிலுக்கு  கிண்டலடித்து வருகின்றனர் இலை கட்சியினர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாணவர்களைப்போல டாக்டர்களுக்கும் பயோ மெட்ரிக் வேண்டும் என்று தமிழகத்தின் சின்ன மாவட்டத்தில் இருந்து ஒரு கூக்குரல் ஒலிக்குதே… உங்களுக்கு கேட்கிறதா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தின்  மையப்பகுதியான சின்ன மாவட்டத்தில் கடந்த இலை ஆட்சியில் அரசு  மருத்துவக்கல்லூரி அமைக்காமலேயே அல்வா கொடுத்துட்டாங்களாம்…  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனையாக தரம்  உயர்த்துறோம்னு சொன்ன அரசு தலைமை மருத்துவமனைக்கு வர்றவங்களை  காப்பாத்துறதே அதிசயமா இருந்ததால, நேயாளிகளுக்கான ட்ரீட்மெண்ட் யாருக்கும்  திருப்தி இல்லாமல் இருந்ததாம்… அரசு ஆஸ்பத்திரியை கட்டுப்படுத்துற தலைமை  அதிகாரி பணியிடமும் கூட 10 வருட இலை ஆட்சியில் நியமிக்கப்படாததால் அந்த  பணியும் தற்காலிகமாவே இருந்து வருகிறதாம்.. இலை ஆட்சியில் டூட்டிக்கு வந்த  டாக்டர்கள் கூட காலை 11 மணிக்குதான் வந்து செல்வதுதான் வழக்கமாக  இருந்தாம்… இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் கூட தனியார்  மருத்துவமனைகளுக்கு சென்று தலை தப்பித்தவர்களும் இருந்தாங்களாம். தற்போது  ஆட்சி மாறி இருப்பதால் பல்ஸ் பார்க்குற டாக்டர்களுக்கும் பயோ மெட்ரிக்  வருகை பதிவு கொண்டு வந்தால்தான் டாக்டர்கள் வந்துபோற நேரம் கரெக்டா  இருக்கும்னு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் மருத்துவமனை ஊழியர்களிடம்  புலம்பறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலை கட்சியின் தீர்மானம் பூமராங் போல திரும்பியதை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சொத்து  குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ‘சின்ன மம்மி’, இலைக்கட்சி  நிர்வாகிகளை தொடர்பு கொண்டு  பேசி வருவது தெரிந்த கதைதான். சுதாரித்த  அக்கட்சி தலைமை, மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, ஆலோசனை கூட்டம் நடத்தி  சசிகலாவுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றக் ேகாரியது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் கூட்டம் நடத்தி, சின்ன மம்மிக்கு எதிர்ப்பு  உட்பட 7 தீர்மானம் நிறைவேற்ற வேண்டினாங்களாம். இதுதான் நேரம் எனக்கருதிய  சில இலைக்கட்சி நிர்வாகிகள், ‘சின்ன மம்மிக்கு எதிராக கண்டனம் தீர்மானம்  போடுறது ஓகே. பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டனையும்  கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும்  நிறைவேற்றுங்கள்’ என 90 சதவீத நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக திரண்டு குரல்  எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தேனி விஐபியின் செல்வாக்கு இன்னும் முதல் படை வீட்டில் அசைக்க முடியவில்லை போல இருக்கே… உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகருக்கு அருகில் இருக்கிற முதல்படை ஆலயத்தில்  இலை ஆட்சியின், துணையானவருக்கு நெருக்கமானவரே தலைமை பூஜைக்காரராகவும், துணையைத் தெரியும் என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறி நிர்வாகத்தையே தன் கைவசம் வைத்திருப்பவராகவும் இருந்தார். இவரை ஆதரிக்கிறவர்களே நிம்மதியாக பணி தொடர்ந்தனர். பொதுவாக அறநிலையத்துறை அதிகாரிகளே ஆலய நிர்வாகங்களைக் கவனித்து செயல்படுத்துவர்.  ஆனால், முதல்படை ஆலயத்தில் மட்டும் அதிகாரிகள் கூட, இந்த ‘‘துணையைத் தெரிந்தவரின்’’ சொல்படி தான் நடக்க வேண்டும். மீறினால் பணியாளர்கள் முதல் பல்வேறு அதிகாரிகள் வரை அனைவரும் அழுத்தத்திற்கும், பாதிப்பிற்கும் ஆளாக நேரிடுமாம்.  மொத்தத்தில் கோயில் நிர்வாகம் முடங்கி, பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் தேக்கமடைந்திருக்கிறது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் இவரது அதிகாரம் தொடர்கிறதாம்.  இப்போதும், சில ஊழியர்களின் செல்போன்களை அவ்வப்போது யாருக்கு போன் செய்கின்றனர் என்பது குறித்தெல்லாம் சோதனை நடைபெறுவதாகவும், பலரும் மன உளைச்சலில் உள்ளதாகவும் தகவல்கள் தொடர்கின்றன.  கொரோனா காலத்தில் பல்வேறு கோயில்களில்,  சிறு நகரங்களின் உப கோயில்களிலும் கூட திருவிழாக்கள் அனைத்தும் உள் திருவிழாவாக நடைபெற்று வரும் வேலையில், இந்த துணையைத் தெரிந்தவரின் தலையீட்டால், உள் திருவிழாக்களும் நடத்த முடியலையாம். இதனால இந்த பழைய பெருச்சாளியை உடனே நீக்கிட்டு கோயில் விஷயத்துல அரசியலே வராமல் செய்யுனும்னு பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காவலர் வீட்டுவசதி வாரியத்தில் ‘டுவின்’ பதவி வகிக்கும் அதிகாரியின் ஆட்டம் தாங்க முடியலையாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தில் செயற்பொறியாளர் ஆக இருக்கும் குமரனானவர், கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் ஆகிய இரு பதவிகளையும் கூடுதலாக 2 வருடங்களாக கடந்த இலை ஆட்சியின் ஆதரவுடன் வகித்து வந்தார். தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் தனக்கு மேல் தற்போது உள்ள நல்ல உயரதிகாரிகளை ஏமாற்றி கூடுதலாக இரு பதவிகளையும் அனுபவித்து அலுவலகத்தில் அட்டகாசம் செய்து வருகிறாராம்.  அலுவல் நேரத்தில் பெண் ஒப்பந்ததாரர்கள் வந்தால் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்துறாராம். அந்த நேரத்தில் மற்ற யாரையும் அனுமதிக்க மறுக்கிறாராம். இதனால் மற்ற பொறியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post பாலியல் மன்னன் ‘பெல்’லை இலை கட்சியில் இருந்து தூக்கணும்னு சின்ன மம்மி ஆட்கள் குரல் எழும்பி இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki yananda ,Alva ,Peter ,leaf ,Belle ,Yananda ,
× RELATED கலெக்டர் ஆபீசில் 7 திருநங்கைகள் தீக்குளிக்க முயற்சி